கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூவர் ஆதரவு
கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவாகியுள்ள மூன்று உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் முன்னிலையில் இது தொடர்பான உறுதிமொழிகளை அவர்கள் வழங்கியுள்னர்.
சுயேட்சை இலக்கம் ஒன்றில் போட்டியிட்ட ஹிக்கடுவகே சஞ்ஜீவ சந்திரதாச, ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட முஹம்மட் ரஷீத் லாஹிர் மற்றும் பிரிதுவ மத்தும போகஹவத்தகே ரோஸி நிஸாந்த ஆகியோரே அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளவர்களாவர்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் ஏ.எல்.எம் அதாவூல்லாஹ், கொழும்பு மாநர சபை எதிரணித் தலைவர் மிலிந்த மொரகொட, ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் நஸீர் அகமட் மற்றும் இணைப்புச் செயலாளர் சியாம் நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment