தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: கிலானி
தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், அதே நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் என பாகிஸ்தான் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தெரிவித்தார். லாகூர் வந்திருந்த பிரதமர் கிலானி செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: ஆயுதங்களை கீழே போடும் பயங்கரவாத அமைப்பு எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயார் என ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது தலிபான்கள் அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. இதற்காக அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மேலும் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும், அதுவும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள மலைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என்றார்.
0 comments :
Post a Comment