ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா நேற்று பொலிஸில் வாக்கு மூலம்
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான ரில்வின் சில்வா நேற்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலமொன்றை வழங்கியுள்ளார்.
பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகக் கட்டடக் காணிஎதிராக மதநாயக்க செய்திருந்த முறைப்பாட்டினையடுத்தே அவர் வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்ற போது ரில்வின் சில்வா தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தனது காலை உடைப்பேன் என எச்சரித்ததாக மதநாயக்க பொலிஸில் செய்த முறைப்பாடு செய்துள்ளார்.இதன் அடிப்படையிலேயே இந்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தனது கட்சியின் தலைமைக் காரியாலயத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே இவ்வாறு பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரில்வின் சில்வா தலங்கம பொலிஸில் வாக்கு மூலமளித்துள்ளார்.
0 comments :
Post a Comment