மீனவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் - அடுத்த வாரம் முதல் ஆரம்பம்
மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தைச் செயற்படுத்தவுள்ளதாகவும், ஓய்வூதியத் திட்டம்தொடர்பான உடன்படிக்கைகள் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உத்தேச ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதை பூர்த்தி செய்யும் மீனவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாவை ஓய்வூதியமாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் மீனவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது மனைவிக்கு ஓய்வூதியக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment