வைத்தியர்கள் இல்லாமல் மூடப்பட்டிருந்த அரசாங்க வைத்தியசாலை உட்பட சுகாதார மத்திய நிலையங்கள் 47 இந்த வருடம் முடிவடைதற்குள் மீளத் திறப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது மீண்டும் வைத்தியக் குழுவினர் நியமனம் செய்வதோடு இந்த சுகாதார மத்திய நிலையங்களுக்காக வைத்தியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.
வைத்தியர்கள் இல்லாததன் காரணமாக நாடு பூராகவும் 97 சுகாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதில் 50 மத்திய நிலையங்களுக்கு வைத்தியர்கள் நியமனம் செய்து தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மூடப்பட்டுள்ள சுகாதார மத்திய நிலையங்கள் அம்பாறை, மட்டக்களப்பு. திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம். கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதுளை, அநுராதபுரம், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலாகும்.
இதில் அதிகமான அளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள சுகாதார மத்திய நிலையங்களாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேநேரம் வடமேல் மாகாண தேசிய தலசீமியா தடுப்புப் பிரிவினர் மூலம் 2010 ம் ஆண்டிலிருந்து 2011ம்; ஆண்டு வரை 70817 பேரை இரத்தப் பரிசோனை மேற்கொண்ட போது தலசீமியா நோய் தொடர்புடைய 56551 பேர் இனங்காண முடிந்துள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இலங்கையில் அதிகமான தலசீமிய நோய்குள்ளானவர்கள் வடமேல் மாகாணத்திலே உள்ளனர். தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையின் தலசீமிய மத்திய நிலையத்தில் 830 பேர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயாளிகளுடைய இரும்பு பிரிவை அகற்றுவதற்கு மருந்துக்காக மட்டும் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை 13,56,28,280 ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலசீமியா நோயானது ஒரு தோற்ற நோயல்ல பெற்றோர்களிலிருந்து பிள்ளைகள் மூலம் பரம்பரை பரம்பரையாக ஏற்படும் நோயாகும். தலசீமியா நோயாளிக்குள்ளான ஆண் பெண் இருபாலாரும் திருணம் முடிக்காமல் இரத்தப் பரிசோதனை செய்த பின் திருமணம் முடிக்குமாறு வைத்தியதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்நோயாளிகளுக்கான சகல வசதிகளும் கொண்ட அமைபப்பு குருநாகல் போதனா வைத்தியசாலையில் காணப்படுகிறது. இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரதேசங்களுக்குச் சென்று நடமாடும் வைத்திய சேவை நடத்தப்படுகிறது.
பாடசாலைகள் பிரத்தியேக வகுப்புக்கள், ஆடைத் தொழிற்சாலை மற்றும் தொழில் நிலையங்களுக்குச் சென்று இது தொடர்பான விழிப்புணவூட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாகாண சுகாதார அமைச்சு மேலும் தெரிவிக்கிறது
No comments:
Post a Comment