Sunday, October 23, 2011

இத்தாலி அனுப்புவதாக கூறி மோசடி செய்துவந்த பெண்ணுக்கு பிணை

இத்தாலி அனுப்புவதாகக் கூறி ஆறு இலட்சம் ரூபா பணத்தை மோசடியான முறையில் பெற்ற சம்பவம் தொடர்பாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட்5 இலட்சம்ரூபா சரீர பிணையில் விடுதலை செய்தார். சந்தேக நபரான பெண் வழக்கின் முறைப்பாட்டாளரிடம் 6 இலட்சம் ரூபா பணத்தை பெற்றதாக நீதிமன்றில் ஏற்றுக்கொண்டார். மூன்று இலட்சம் ரூபா பணத்தை சந்தேக நபர் முறைப்பாட்டாளருக்கு கொடுத்ததுடன் மிகுதிப்பணத்தை 50 ஆயிரம் ரூபா வீதம் தவணை முறையில் செலுத்த இணக்கம் தெரிவித்தார்.

இத்தாலியில் தொழில் புரியும் நபர் ஒருவர் தொலைபேசியூடாக முறைப்பாட்டாளரை தொடர்பு கொண்டு சந்தேக நபரை அறிமுகப்படுத்தினார். சந்தேக நபரான பெண் கொட்டகொட பிரதேசத்தில் தங்கியிருந்து முறைப்பாட்டாளரிடம் பணத்தை பெற்றுள்ளார். பின்னர் சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்துக்கு வீடொன்றை வாடகைக்கு பெற்று தனது இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இந்நிலையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய விசேட குற்ற விசாரணை பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேநேரம் மீன் தொட்டி ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி 12 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை நீர்கொழும்பு பரதான மஜிஸ்ரேட்7500 ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

ஹெட்டியாகம, ஜா -எல பிரதேசத்தை சேர்ந்த நபர்ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவர் இந்த வழக்கின் முறைப்பட்டாளர் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாவார். கடந்த செப்டம்பர் மாதம் 287 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்து வீடு வந்த சிறுவன் தனது தாயாரிடம் முடி வெட்டி விட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட சென்றுள்ளான் பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்பியுள்ளான் இது தொடர்பாக தமாயார் மகனிடம் விசாரித்த போதே சந்தேக நபர் மகனை பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த விடயம் தெரியவந்தது.

சந்தேக நபர் அந்த சிறுவனுக்கு 30 ரூபாய் பணம் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணம்கள் சிலவற்றையும் கொடுத்துள்ளார் மீன்தொட்டி ஒன்றை தருவதாக கூறி சிறுவனை தனது இருப்பிடத்திற்கு அழைத்து பாலியல் வீடியோ காட்சிகளை சிறுவனுக்கு காண்பித்துசந்தேக நபர் சிறுவனை துஸ்பிரயோகம் புரிந்துள்ளார் ஜா –எல பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்

நீர்கொழும்பு சாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com