பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக முறையிட தொலைபேசி இலக்கம்
நாட்டினதும் மற்றும் பொது மக்களினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் ஒன்றை இராணுவத் தலைமையகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது குறித்து 0113 13 62 33 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேற்படி தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும், எந்த நேரத்திலும் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment