Monday, October 3, 2011

குடும்பம் ஒன்றை கடத்திவைத்து கப்பம் கோரிய பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் கைது.

மத்துகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட ஐவர் பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவியை கடத்தி வைத்து ஒருகோடி கப்பம் கோரியமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் உள்ள நகை அடகு பிடிக்கும் மற்றும் மாணிக்ககல் வியாபாரி ஒருவருடன் தொழில் புரியும் துஸார என்பவரும் அவரது மனைவியுமே இவ்வாறு கடத்தப்பட்டவர்களாகும்.

இவர்களை கடத்திய பொலிஸ் பரிசோதகர்கள் கண், கைகளை கட்டி பேருவலவில் உள்ள தமது வீட்டினுள் ஒரு நாளும் மறுநாள் களுத்துறையில் உள்ள நண்பரின் வீட்டிலும் அடைத்துவைத்து கடத்தப்பட்டவர்களின் முதலாளியான டினேஸ் சானக்கவிடம் மேற்படி கப்பத்தொகையை கோரியுள்ளனர்.

கடத்தப்பட்டவர்கள் சட்டவிரோத புதையல் தோண்டலில் ஈடுபடுவதாகவும் அதற்கான சட்டநடிவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டியுள்ளதுடன் தாம் பாதுகபாப்பு அமைசின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாக்கள் எனவும் கூறியே இக்கப்பம் கோரப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதர்களான ஜெயசிங்க, விக்ரமஆராச்சி ஆகியோர் 20 ம் மத்துகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டதுடன் இவர்களது சாக்கள் மூவர் கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டு 29 திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் கடத்தல் காரர்களுக்கு வீடு வழங்கிய நபர் ஆரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com