கரோக்கி களியாட்ட நிலைய பொறுப்பாளரை தாக்கிய விமானப்படை வீரருக்கு பிணை.
கரோக்கி இரவு களியாட்ட விடுதியின் பொறுப்பாளரை கைகளினால் தாக்கி அந்த விடுதியின் பெயர்பலகையை கல்லொன்றினால் அடித்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட விமானப்படை வீரரை நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஐயாயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
ஏக்கல விமானப்படை முகாமில் பணியாற்றும் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். 2011 செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள களியாட்ட விடுதிக்கு சென்ற சந்தேக நபர் அடுத்த நாள் விடியற்காலை அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதன் பின்னர் அந்த கரோக்கி நிலையத்தின் பொறுப்பாளரான தெல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் விடியற்காலை பாண் வாங்குவதற்காக அந்த நிலையத்திலிருந்து வெளியே வந்த போது சந்தேக நபர் அலரை தாக்கியுள்ளதுடன் கல்லொன்றினால் கரோக்கி விடுதியின் பெயர் பலகையையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக வழக்கின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment