பதுளை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுக்கு, அப்பதவியில் சத்தியப்பிரமாணம் செய்வதை, தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து உறுப்பினர்களுக்கும், எதிர்வரும் முதலாம் திகதி வரை, அப்பதவிகளில் சத்தியப்பிரமாணம் செய்வதை, தடுக்கும் வகையில், இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதுளை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள், இம்மனுவை சமர்ப்பித்துள்ளனர். பிரதிவாதிகளாக பதுளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment