Wednesday, October 12, 2011

பாதுகாபப்புச் செயலாளரால் இராணுத் தளபதிக்கு மேலுமோர் இலக்கு.

அண்மையில் கொலனாவ பிரதேசத்தில் ஆழும்கட்சி பிரமுகர்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் போதைப்பொருட்களின் பாவனை, இறக்குமதி உள்ளுர் வியாபரம் மற்றும் பாதாள உலகங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் இலக்கொன்று பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான அரசியல் பிரமுகர்களுடன் பாதாளக்குழுக்கள் உள்ளன. இவர்கள் இப்பிரபலங்களின் மெய்ப்பாதுகாவலர்களாகவும் செயற்படுவதுண்டு. சில சமயங்களில் உத்தியோக பூர்வ மெய்ப்பாதுகாவலர்களின் வாகனத்தொடரணிகளுடன் தமது சட்டவிரோத ஆயுதங்களுடனும் பயணிப்பர். இவை அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு செயலரினால் இராணுவத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பிரமுகர் பாதுகாப்பு பிரிவினைச் சேர்ந்த உத்தியோகித்தர் அனைவரும் சீருடைகளை அணிந்திருக்கவேண்டும் என்ற உத்தரவும் பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com