தமிழீழ நீதின்றில் ஸ்ரீலங்கா நிதிமன்றை திறந்து வைத்தார் அமைச்சர் ரவுப் ஹக்கீம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழ நீதிமன்று என்ற பெயரில் இயங்கிவந்த நீதிமன்றக் கட்டிடத்தில் ஸ்ரீலங்கா நீதிமன்று இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களாகவிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நீதிச் சேவையை விஸ்தரிக்கும் பொருட்டு கிளிநொச்சி பிரதேசத்தில் நேற்று முன்தினம் மேற்படி நீதிமன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களும், சிறப்பு அதிதியாக பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயக்க அவர்களும் வந்திருந்தனர். அத்துடன் வடமாகணத்தைச் சேர்ந்த சகல நீதிமன்றங்களின் நீதிபதிகளும் , பிரபல வக்கீகளும் , அரச உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் நீதிமன்ற வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டிடத்தொகுதியும் நேற்று அதிதிகளால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான நீதிமன்றுகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் அதற்கான கட்டடங்களுக்கான நிதியினை திறைசேரி ஒதுக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் யாழ்பாணத்தில் சிறுவர் துஷ்பிரயோக விசாரணைக்கான விசேட நீதிமன்று ஒன்று விரைவில் நிறுவப்படவுள்ளதாகவும் நீதியமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவ்வாறான நீதிமன்றுகள் நாடு பூராகவும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment