கல்முனை மாநகரின் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்: பிரதி மேயர் நிசாம் காரியப்பர்
கல்முனை மாநகரின் நான்காவது மேயராக கலாநிதி சிராஸ் மீராசாஹிபும் பிரதி மேயராக சட்டதரணி நிசாம் காரியப்பரும் தெரிவுசெய்யபட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் அறிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப் முதல் இரண்டு வருடங்களுக்கும் இரண்டாம் இடத்தை பெற்ற நிசாம் காரியப்பர் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இப்பதவியை சுழற்சி முறையில் வகிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவுப் ஹகீம் மேலும் குறிப்பிட்டார்.
மேயராகதெரிவுசெய்யப்பட்டுள்ள கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தமது ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தில் ஆரம்பித்தார். பின்னர் கொழும்பு சாஹிரா கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார். லண்டனில் தனது உயர்கல்வியை பயின்ற இவர் வியாபார முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களையும் பெற்றுள்ளார். தனது உயர்கல்வியை பூர்த்திசெய்த பின்னர் கொழும்பு தெகிவளையில் மெட்ரோ பொலிற்றன் கல்லூரியை ஸ்தாபித்து கல்வித்துறைக்கு சேவையாற்றி வரும் இவர், இம்மறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டதன்மூலம் அரசியலில் பிரவேசித்தார். தனது முதலாவது பிரவேசத்தின்போதே அதிகூடிய விருப்பு வாக்காக 16457 வாக்குகளைப் பெற்று விருப்பு வாக்குப் பட்டியலில் முதலாம் இடத்தை பெற்றதன் மூலமாக கல்முனை மாநகரின் நான்காவது மேயராக தெரிவாகியுள்ளார்
0 comments :
Post a Comment