ஜயவர்தனபுர வைத்தியசாலையைச் சுற்றி வளைத்து துமிந்த சில்வாவுக்கு பாதுகாப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள், ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் காணரமாக அவரைப் பாதுகாக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ஜயவர்தனபுர வைத்தியசாலையைச் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு வழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வாவின் உடல் நிலை தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாது என ஜயவர்தனபுர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரின் உடல் நிலை குறித்து சத்திர சிகிச்சை முழுமையாக முடிவடைந்த பின்னரே கூற முடியும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடம்பிலிருந்து இரண்டு தோட்டாக்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள துமிந்த சில்வாவின் காரியாலயத்திற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பாரதலகஷ்மன் பிரேமசந்ரவின் மரணத்தை அடுத்து கோபமடைந்துள்ள அவரது ஆதரவாளர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது முல்லேரியா பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment