ஹம்பாந்தொட்டவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
மிரிஜ்ஜவிலவில பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
காயமடைந்த ஆறு பேரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வானில் பயணித்தவர்களில் இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதியும் உதவியாளரும் அவ்விடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
No comments:
Post a Comment