ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கத்தரி.
கத்தரி காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையை சார்ந்ததாகும் நீர்சத்து அதிகமாக காணப்படும் கத்தரிக்காயில் விட்டமின்கள் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, பார்பரஸ், கல்சியம் என்பன நிறைந்துள்ளன விட்டமின்கள் அதிகம் இருப்பதால் நாக்கு அழற்ச்சியினை போக்கவல்லது. கத்தரியின் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக்குழல் நோய், சிறுநீர்க்கழிப்பின் போது ஏற்படும் வலி ஆகியவற்றினை குணப்படுத்தும். வாயில் எச்சில் சுரக்க உதவும். வேர் ஆஸ்துமா மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.
வேரின் சாறு காதுவலி போக்க பயன்படுகிறது கத்தரிக்காயில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம்தருகின்ற விட்மின்கள் சிறிதளவு உள்ளன இதனால் வாய்வு பித்தம் கசம் போன்ற பிரச்சனைகள் அகன்று விடும் அதனால்தான் பத்திய வைத்தியத்தில் இந்தக்காய் முக்கிய இடத்தை முக்கிய இடம் வகிக்கின்றது.
அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் கத்தரிக்காயை சாப்பிட்டால் நல்லபலன் கிடைக்கும். காலின் வீக்கத்தை குறைப்பதற்கு அப்பகுதியில் பூசிக்கொள்வார்கள் இதைப்பிழிந்து சாறு எடுத்து உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் பூசுவதன் மூலம் வியர்வையை தடை செய்யலாம்.
மேலும் கொழுப்பு சேர்வதற்கு எதிரானது. கல்லீரல் நோய்களுக்கு நல்ல மருந்தாகும் இரத்தத்தில் உள்ளகொழுப்பு அளவினை குறைக்க வல்லது. இரத்த அழுத்தத்தினை சரிப்படுத்த சிறந்த உணவாகும் உடலில் கூடுதலாக உள்ள கொழுப்புச்சத்தின் அளவை கட்டுப்படுத்த கத்தரிக்காய் உதவுகிறது.
ஜெர்மனி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கத்தரியின் மருத்துவப்பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன சுத்த இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்க உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மூல நோய்க்கு மேல் பூச்சாக பயன்படுகிறது நசுக்கபப்பட்ட கனியானது வெங்குரு மற்றும் வெயில் காரணமாக முகம் சிவந்திருத்தலை போக்கவல்லது.
0 comments :
Post a Comment