பொத்தானை அழுத்தினால் விரும்பிய பீஸா உணவை தயாரித்து வழங்கும் இயந்திரம்.
வாடிக்கையாளர் விரும்பும் பீஸா உணவு வகையை 90 செக்கன்கள் முதல் மூன்றரை வரையான காலப்பகுதியில் தயாரித்து வழங்கும் அதிநவீன இயந்திரமொன்றை அமெரிக்க நிறுவனமொன்று வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த பீசா தயாரிக்கும் இயந்திரம் விரைவில் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு விடப்படவுள்ளது.
மேற்படி பீஸா உணவு தயாரிக்கும் உபகரணத்தின் 5 மாதிரிகள் பரீட்சார்த்தமாக சந்தையில் அறிமுகப்தப்பட்டுள்ளன. மூன்று வகையான பீஸா உணவு வகைகளில் எந்தவகை பிஸாவை வாடிக்கையாளர்கள் பொத்தானை அழுத்தி தெரிவுசெய்கின்றனரோ அதனை இந்த இயந்திரம் உணவக ஊழியர்களின் உதவி எதுவுமின்றி சுயமாக தயாரித்து வழங்குகின்றது. மேற்படி இயந்திரத்தில் பீசா எவ்வ்hறு தயாரிக்கப்படுகிறது என்பதை அந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட 32 அங்குலத்தட்டை தொலைக்காட்சியில் அவதானிக்க முடிவது சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment