ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய பொலிஸார் எச்சரிக்கை.
சர்வதேச நாடுகளுக்கான விஜயங்களின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஐரோப்பிய பொலிசார் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருப்பதால் வெளிநாட்டு பயணம்களின் போது அவருக்கான பாதுகாப்புக்களை பலப்படுத்த வேண்டிய தேவையேற்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
எவ்வாறான அச்சுறுத்தல் இருந்த போதிலும் ஜனாதிபதியினது அண்மைய வெளிநாட்ட பயணத்தின் போது 25 நாடுகளுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பினையடுத்து ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிகளில் நாடு பாதுகாக்கப்பட்டதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் கூடியது, இதன் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மாநாட்டின்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் அங்கு எமது நாடு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு எதிராக பாரிய சவால்கள் எழுந்திருந்தன எனினும் அந்த சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய இயலுமை எமக்கு இருந்தது.
ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தின் போது பலம் பொருந்திய பல நாடுகள் எமது நாட்டுக்கு எதிராக செயற்பட்டன அதுமட்டுமல்லாது இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைக்கப்போவதாகவும் கூறப்பட்டது எனினும் பிரேரணை சமர்பிக்கப்போவதாக கூறிய நாட்டினது வெளிவிவகார அமைச்சர் என்னை சந்தித்து அவ்வாறானதொரு பிரேரணையை தாம் சமர்பிக்கப்போவதில்லை எனக்கூறினார். ஏனெனில் பிரேரணையை அங்கீகரிப்பதற்கான ஆதரவு அங்கு இருக்கவில்லை ஜனாதிபதியின் நடவடிக்கையினால் ஜெனீவா பேரவையில் எழுந்த சூட்சிகளை முறியடித்து நாட்டை பாதுகாக்க முடிந்தது என்றார்
0 comments :
Post a Comment