இந்தியாவை பயங்கரவாதிகள் தாக்கக்கூடிய அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. விடுமுறையைக் கழிக்க இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்கர்களுக்கு இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. பண்டிகை காலத்திலும் பள்ளி விடுமுறை காலத்திலும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும்.
அதனால் அங்கு செல்லும் அமெரிக்கர்கள் எப்பொழுதும் விழிப்புடனும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். அடிக்கடி செய்தி நிலவரங்களை அறிந்து வைத்துக்கொள்வது நல்லது என்று தன் குடிமக்களை அது கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று அண்மையில் இந்திய அரசு அதிகாரிகளும், அமெரிக்க ஊடகங்களும் தெரிவித்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனவே இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற் கொண் டிருக்கும் அமெரிக்கர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. 2012ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை இந்த எச்சரிக்கை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment