நாடுகடந்த தமிழீழ செயற்பாட்டாளர்களுக்கு இந்தியா செல்லத்தடை!
நாடுகடந்த தமிழீழம் என்றபோர்வையில் மக்களிடம் பணம்சுருட்ட புறப்பட்டுள்ள கூட்டத்தினரை நாட்டினுள் அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு இந்தியா அரசாங்கம் வந்துள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. இச்செய்தி தொடர்பாக புலிகளின் நெடியவன் குழுவினரல் வெளியிட்படும் கறுப்பு எனும் பத்திரிகையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த ஜனநாயகவாதிகளுக்கு இந்தியா பயணத் தடை - பின்னணியில் நரிகேசி உருத்திரகுமாரன்
நாடுகடந்த அரசாங்கத்தின் ஜனநாயக அணியினருக்கு இந்தியா பயணத் தடை விதித்திருப்பதாக கறுப்பிற்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடுகடந்த அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகவாதிகள், தமது கடவுச்சீட்டின் நிழற்பிரதியை நரிகேசி உருத்திரகுமாரனின் 'தேர்தல் ஆணையாளர்களிடம்' கையளித்திருந்தனர்.
இந்நிலையில் தற்பொழுது இக்கடவுச்சீட்டுக்களின் நிழற் பிரதிகள் புதுடில்லியில் உள்ள இந்திய
வெளியுறவுத்துறை அமைச்சின் செயலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, ஜனநாயகவாதிகள் அனைவரும் இந்திய அரசின் பயணத் தடையை உறுதிசெய்யும் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
மேற்படி நாடுகடந்த தமிழீழம் இரு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளமையும், நெடியவன் தரப்பினர் ஜனநாயக நாடு கடந்த தமிழீழத்தினர் எனவும் உருத்திரகுமார் தரப்பினர் சர்வாதிகார, பாசிச நாடுகடந்த தமிழீழத்தினர் எனவும் கறுப்பின் செய்தி தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment