தேர்தல் வெற்றி அபிவிருத்தி வேலைத் திட்டம்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும் -பிரதமர்
மஹிந்த சிந்தனை மூலம் எதிர்கால வேலைத்திட்டத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டம்களை முன்னெடுத்து செல்ல மக்களின் ஆணை இம்முறையும் கிடைத்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியானது அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம்கள் மீதான மக்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடடுள்ளதாவது, கவலைக்குரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள போதிலும் இதன் மூலம் தற்போதைய தேர்தல் முறையின் கீழான விருப்பு வாக்கு முறையின் குறைபாடுகள் வெளிப்படுகின்றன.
அரசாங்கம் முன்கொண்டு செல்கின்ற அபிவிருத்தி வேலைத் திட்டம்களுக்கு கிடைத்துள்ள பாரிய அங்கீகாரமாகவே நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலை பார்க்கிறோம். 58 வருடம்களுக்கு பின்னர் கண்டி மாநகர சபையின் நிர்வாக அதிகாரம் ஐ.ம.சு. முன்னணிக்கு கிடைத்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியை கொண்டாடுமாறு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றேன்.
அனுராதபுரம், நுவரெலியா. அம்பாந்தோட்டை. குண்டசாலை ஆகிய உள்ளூராட்சி மன்றம்களிலும் பாரிய வித்தியாசத்தில் எங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment