மனித உரிமையினை பலப்படுத்த புதிய செயற்திட்டம்
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு சர்வதேசத்தினால் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வரும் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் முகங்கொடுப்பதற்கான புதிய நடவடிக்கை ஒன்றை அரசு அறிவித்துள்ளது. தேசிய செயற்திட்டம் என்ற குறித்த நடவடிக்கைக்கு நேற்றையதினம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தின் மூலம் சிவில் உரிமைகள் பலப்படுத்தப்படுவதோடு சிறந்த மனித உரிமைகளுக்கான புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாட்டினை காணமுடியுமென அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த செயற்திட்டம் குறித்து எதுவித விவரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனால் அரசு வெளியிட்ட அறிக்கையொன்றில் பாரிய அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டமீறல்கள் குறித்து கண்காணிக்கப்படுவதுடன் சிறந்த புரிந்துணர்வுடனும் கௌரவத்துடனும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment