வாக்களிப்பு நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளுக்கு விடுமுறை _
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வாக்களிப்பு, மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு இன்று ஐந்தாம் ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏழாம் திகதி வரை விடுமுறை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் எட்டாம் திகதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இப் பாடசலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (10 ஆம் திகதி) மீண்டும் திறக்கப்படும்.இது தொடர்பான சுற்றுநிருபம் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment