Friday, October 21, 2011

சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ் பொது நூலகத்தில் புத்தக கண்காட்சி.

உலக வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ் பொது நூலகமும் யாழ் மாநகரசபையும் இணைத்து யாழ் நூலக மண்டபத்தில் புத்தக கண்காட்சி ஒன்றினை 3 நாட்கள் நடத்துகின்றன . இன்று ஆரம்பம் ஆகிய இவ் புத்தக கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இவ் கண்காட்சியினை யாழ் மாநகர மேயர் ஜோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் நாடாவெட்டி கண்காட்சியினை தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இவ்புத்தக கண்காட்சியில் சட்டம், சமயம், இலக்கியம், இலக்கண நூல்களே காட்சிபடுத்தப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் பொது நூலகத்துக்கு அன்பளிப்பு செய்த நூல்களும், புதிதாக கொள்வனவு செய்த நூல்களுமே இவ் புத்தக கண்காட்சியில் காட்சிபடுதப்பட்ட நூல்கள் ஆகும்.







No comments:

Post a Comment