தனது வீடு சோதனையிடப்பட்டதன் பின்னணியில் உள்ளோர் அம்பலப்படுத்தப்படுவர்.
நீர்கொழும்பு தளுபத்தையிலுள்ள தனது இல்லத்தில் விசேட அதிரடிப்படையினரால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பான உண்மை சில தினங்களில் வெளிவரும் என மேல் மாகாண வீதி அபிவிருத்தி,மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரான நிமல் லான்ஸா கூறியள்ளார்-.
இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது எனக்கும் புரியவில்லை. ஆனால் ஓரிரு நாட்களில் உண்மை வெளி வந்து விடும் எனவும். இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கருதுவதால், அவர் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் நிமல் லான்ஸா குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற அன்று நீர்கொழும்பு மாநகர சபையில் தான் இருந்தவேளை இம்முற்றுகை குறித்து முதலில் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர்தொடர்ந்து இது பற்றி குறிப்பிட்டுள்ளதாவது ,
எனது நண்பர்கள் சிலரின் வீடுகள் சோதனையிடப்படுவதாக நான் அறிந்தேன்.ஆனால் ஒரு சில நிமிடங்களின் பின்னர் எனது வீடும் சோதனையிடப்படுவதாக அறிந்து நான் வீட்டிற்கு விரைந்தேன். சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்கள் குறித்து சோதனையிடுமாறு உயர்மட்ட உத்தரவு கிடைத்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
நான் சோதனையைத் தொடருமாறு கூறினேன். ஆனால் அவர்களால் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான ஒரு ஆதாரத்தைக்கூட கண்டறிய முடியவில்லை என மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment