தேர்தல் முடிவுகள் சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வருமாம்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இலங்கை அரசாங்கம் தொடர்பான சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வரும் என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் சாணக்கியம் தேர்தல் முடிவுகள் ஊடகாக அனைத்து தரப்பினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயக ஆட்சி இல்லை என சர்வதேச நாடுகள் கூறி வந்தன. போர்க்குற்ற விசாரணைகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்று கூறியும் இலங்கையின் இறைமைக்கு சவால் விடுக்கப்பட்டது.
ஆனால் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் என்பதை நிரூபித்துள்ளனர். அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மக்கள் மீண்டும் ஒரு முறை அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இலங்கையின் இறைமை தன்னாதிக்கத்தை மக்கள் அடகுவைக்கமாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சிக்கு இது நல்ல செய்தியாகும். இலங்கையின் ஜனநாயக ஆட்சி இல்லை என சர்வதேச நாடுகள் கூறி வந்தன. போர்க்குற்ற விசாரணைகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்று கூறியும் இலங்கையின் இறைமைக்கு சவால் விடுக்கப்பட்டது. அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் பாடம் கற்பித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சி கொழும்பு மாநகர சபையை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை. ஆனாலும் கொழும்பு நகரை அரசாங்கம் அபிவிருத்தி செய்யும். ஏனெனில் கொழும்பு ஒரு வாத்தக நகரம் என்றார்.
0 comments :
Post a Comment