இந்திய பிரஜை மட்டக்களப்பில் கைது
இந்தியப் பிரஜை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி இளைஞர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து புடைவை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த சுமார் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான புடைவை வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment