கொரிய மொழிப்பரீட்சையில் குதிரையோடலைத் தடுக்க விசேட பாதுகாப்பு.
எதிர் வரும் 15 மற்றம் 16 ம் திகதிகளில் கொழும்பில் நடத்தப்படும் கொரியா மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்க கட்டளை பிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.
இந்த வருடம் இந்தப் பரீட்சை நடத்தப்படுவது கொழும்பில் மாத்திரம்தான் ஆகும். கொழும்பில் நகரில் 10 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக 600 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவதற்கு கொழும்பு மாவட்ட பொறுப்புவாய்ந்த பிரதிப் பொலிஸ் அதிபர் அநுர சேனநாயக்க இணக்கம் தெரிவித்தள்ளார்.
பரீட்சையின் போது மேற்கொள்ளப்படும் சிக்கல்களையும் சந்தேகங்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு நோக்கமாகக் கொண்டே இந்தப் பொலிஸ் பாதுகாப்பு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொலைபேசி மூலமாகவோ அல்லது வேறு தொழில் நுட்ப முறையைப் பயன்படுத்தி பரீடசையில் மோசடியில் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளைத் தடுப்பதோடு இந்த நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நதப் பரீட்சையின் போது எந்தவொரு நபராவது சரி மோசடியில் ஈடுபட தயாhக இருப்பாராயின் தகவல் வழங்குமாறு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு தவிசாளர் மேலும் தெரிவித்தார்
தொலைபேசி இலக்கங்கள் 0112433342, 0112322322,0773140300, அல்லது 0112864118
இக்பால் அலி
0 comments :
Post a Comment