முல்லேரியாவில் இடம்பெற்ற பாரத லக்க்ஷ்மனின் கொலையானது சட்டவிரோத ஆயுதங்கள் நாட்டில் பரவலாக உள்ளமையின் பிரதிபலனாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.அதிகாரம் தொடர்பில் இரு தரப்பினர்க்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையே துப்பாக்கிப் பிரயோகத்திற்குக் காரணம் எனவும், சில தரப்பினர் குறிப்பிடுவது போன்று தானோ அல்லது ஜனாதிபதியோ இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
புலிகள் இயக்கம் கருணா அம்மானால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பொருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ தனது செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment