Friday, October 7, 2011

தேர்தல் சட்டங்களை யாராவது மீறினால் உடன் தொலைநகலில் முறைப்பாடு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எவரும் தேர்தல் சட்டங்களை மீறினால் அது குறித்து முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி முறைப்பாடுகளை தொலைநகல் மூலம் அனுப்பி வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை 0112 877 613 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் செய்ய முடியும்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பில் 0112 877 616 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் செய்ய முடியும்.

அம்பாறை, அநுராதபும், குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவடத்தில் உள்ளவர்கள் தங்கள் முறைப்பாடுகளை 0112 877 614 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் செய்ய முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com