இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்ததில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.10 அளவில் தெற்குப் பாணந்துறை பகுதி முங்வத்தை - அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அக்காவும் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்த அக்கா பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய கௌசல்யா ஜெயசுந்தர என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.இவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கா உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த தம்பியான 22 வயதுடைய சச்சின் ஜெயசுந்தர தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment