தாய்லாந்துக்கான விஜயத்தை தவிர்த்துக் கொள்ளவும் - வெளிவிவகார அமைச்சு
வெள்ள அபாயம் தனியும் வரை தாய்லாந்துக்கான விஜயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு, வெளிவிவகார அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தாய்லாந்தின் தலைநகரான பெங்கொங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால்தாய்லாந்துக்கான பயணத்தை குறைத்துக் கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால். வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு உரிய தகவலை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்திலுள்ள நபர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் ஊடாக உரிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment