போதைப்பொருள், கொள்ளை, கப்பம் என்பவற்றை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் - ஜனாதிபதி
போதைப்பொருள், கொள்ளை, கப்பம் என்பவற்றை இந்த நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறானதொரு நடவடிக்கை நாட்டில் மேற்கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்று சேர வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற 23 உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள், உப தலைவர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்யும் கொண்டனர்.
இந்நிகழ்வு அலரிமாளிகையில் இடம் பெற்றது. அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது,
செய்தால் சரியாக செய் – இல்லையேல் வெளியில் செல் என்ற வாக்கியத்திற்கு அமைய நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களுக்கான சேவையினை சிறந்த முறையில் வழங்கவேண்டும்.
தங்களுக்கான பாதுகாப்பினை கோருவதற்கு எவருக்கும் உரிமை இருக்கின்றது. யார் என்னிடம் பாதுகாப்பு கோரினாலும் அது தொடர்பில் இறுதி முடிவை நான் தான் எடுப்பேன். இதை யாரும் விமர்சிக்க முடியாது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எவரையும் புறக்கணிக்கப்போவதில்லை. கொலன்னாவையில் மேயர், பிரதி மேயர் இருவரும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் கொலன்னாவையில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவம் மீண்டும் இடம்பெறக் கூடாது. அந்த சம்பவமானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியில் கருப்பு புள்ளியை வைத்தது போன்றதாகும்.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் 23 உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவான உறுப்பினர்களும் இதன் போது பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.இன்றைய சத்தியபிரமாண நிகழ்வில் கல்முனை மாநகர சபையில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மேயர் மற்றும் பிரதி மேயரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. .
0 comments :
Post a Comment