உயர்ந்த சம்பளத்தில் வசதிகளுடன் கூடிய வீடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியான முறையில் பல இலட்சம் ரூபா பணத்தைப்பெற்று ,பெண்களை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று குறைந்த சம்பளத்தில் வசதிகள் குறைந்த வீடுகளில் அவர்களை பணிப்பெண்களாக அமர்த்தி மோசடியான முறையில் பணம் ஈட்டி வந்த குழுவைச்சேர்ந்த பெண் ஒருவரையும், நபர் ஒருவரையும் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்களை பொலிசார் நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபர்களை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் நான்கு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கின் முறைப்பாட்டாளரான பெண்ணை சந்தே நபரான பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி எகிப்துக்கு அழைத்த சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள வீடொன்றில் அந்தப்பெண்ணை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார். இரண்டரை மாதம் கடந்தும் தனக்கு வேதனம் வழங்கப்படவில்லை எனவும் வசதிகள் குறைந்த வீடொன்றிலேயே தான் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அங்கு தனக்கு கடினமடான வேலைகள் செய்ய வேண்டி ஏற்பட்டள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கையில் உள்ள தனது கணவருக்கு இது தொடர்பாக அறிவித்து பணத்தை வரவழைத்து நாடு திரும்பியதாகவும் அவர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment