Saturday, October 29, 2011

ரிவைஓ ஊடாக வன்னி வந்த அனைவரும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனராம்.

இலங்கையில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் ரிவைஓ எனப்படும் தமிழ் இளையோர் அமைப்புகளுடாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வன்னிவந்த அவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ளதாக, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளாராகவிருந்த கஸ்ரோவின் உதவியாளர் நவரத்தினம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கினை ஜெகன் என அழைக்கப்படும் அருணாச்சலம் ஜெகன் மற்றும் மீனா கிருஸ்ணமூர்த்தி எனப்படுகின்ற இருவர் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி வழக்கினை தாக்கல் செய்துள்ள மீனா கிருஸ்ணமூர்த்தி என்பர் அவுஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தான் வன்னியில் இருந்தபோது பல தரப்பட்ட விடயங்களை நேரடியாக அனுபவித்ததாகவும், தனது கணவர் புலிகளின் சிவில் நிர்வாக பிரிவில் கணக்காளராக பணியாற்றியதாகவும், தெரிவித்துள்ளதுடன் தான் கர்பிணியாகவிருந்தபோது யுத்த உக்கிரம் காரணமாக தனது குழந்தை வயிற்றினுள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மேற்படி மீனா கிருஷ்ணமூர்த்தி வன்னியில் புலிகளின் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டு மாலதி படையணியில் இருந்தவர் எனவும் இவரது இயக்கப்பெயர் ஈழநதி எனவும் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாகவிருந்த கஸ்ரோவின் உதவியாளராக செயற்பட்டுவந்த கனகரட்ணம் பிரபாகரன் தெரிவிக்கின்றார்.


அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரபாகரன் மேலும் ஈழநதி முத்தையன் கட்டுப்பிரதேசத்தில் ஆரம்பப்பயிற்சிகளையும் பளையில் போர்ப்பயிற்சியையும் பெற்றுக்கொண்டதாவும் பின்னர் புலிகளின் போர்ப்படையணி ஒன்றின் சிரேஸ்ட உறுப்பினரான குபேரன் எனப்படுகின்ற தயாபரனை திருமணம் செய்து கொண்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளின் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்களான பாதிரி இமானுவேல், அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்துள்ள ஜெகன், அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயன்று சிறை அனுபவித்துவரும் சதா எனப்படும் இளைஞன் உட்பட பல்வேறுபட்டோர் சம்பந்தமான தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது நேர்காணலை முழுமையாக கேட்க இங்கு அழுத்தவும்.

No comments:

Post a Comment