செங்கல்லையும் பல்பையும் சாப்பிடும் சிறுமி
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் மூன்று வயது சிறுமி நட்டலி ஹேஹுஸ்ட்டிற்கு செங்கல், குச்சி, பல்பு இவற்றை சாப்பிடுவது என்றால் அவ்வளவு விருப்பமாம். சாக்லெட் சிப் பிஸ்கட் சாப்பிடுவது போல் இந்தப் பொருள்களை அந்தச் சிறுமி விரும்பி சாப்பிடுவதாக. அவரின் தாயார் டெரி ஹாவ்டி கூறினார்.
இந்தப் பொருட்களைச் சாப்பிடுவதால் தன் குழந்தையின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று அந்தத் தாய் கவலைப்படுகிறார். ஒரு நாள் இரவு மகளைத் தூங்க வைத்துவிட்டு அந்தத் தாய் சமையலறையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்தச் சிறுமி திடீரென்று அங்கு வந்திருக்கிறார். குழந்தையின் வாயில் ரத்தத்தையும் சிறு துண்டு கம்பியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தத் தாய் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாராம்.
அன்றிரவு அந்தச் சிறுமி, இரவு விளக்கின் பல்பை கழற்றி கம்பியை மட்டும் விட்டுவிட்டு பல்பு முழுவதையும் சாப்பிட்டு விட்டதாக அந்தத் தாய் கூறினார்.
0 comments :
Post a Comment