போதைப்பொருள் ஒழிப்பில் படையணிகளும் இறக்கப்பட்டுள்ளன. கோட்டா
30 ஆண்டுகால பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை போன்று, போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதங்கள் ஆகியவற்றையும், சமூகத்திலிருந்து அகற்றுவதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினர் இதற்கு தயாராகவிருப்பதாக, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் ஏராளமானோர், கைது செய்யப்பட்டனர். பாதாள உலக கோஷ்டிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் உள்ள ஆயுதங்களை கைப்பற்றுவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பாகவும், பல சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொலிஸார் மட்டுமன்றி, கடற்படையினரும் ராணுவத்தினரும் இணைந்து, இந்த போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கும், பாதாள உலக கும்பல்களை கைது செய்வதற்கும், நாம் பாரிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளோம். பொலிஸார் மட்டுமன்றி, ராணுவத்தில் உள்ள அதிதிறமை வாய்ந்த படையணிகளையும், இதில் நாம் ஈடுபடுத்தியுள்ளோம். இந்த இரண்டையும், இல்லாதொழிப்பதற்கு, நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment