தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் செயற்படுகின்றன. இதற்கு கூட்டமைப்பினன் அமெரிக்க விஜயம் இதன் ஒரு கட்டமே யாகும். எனவே தமிழ்க் கூட்டமைப்பின் தேசத்துரோக செயல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட் சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சரு மான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ளார்.
கேணல் கடாபியின் கொலையுடன் உண்மையான போர்க் குற்றவாளிகள் யார்? என்பது வெளிப்பட்டுள்ளது. எனவே ஐ.நா. இலங்கைக்கு எதிராக செயற்படுவதை நிறுத்தி விட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு நாளை அமெக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளது. இவ்விடயம் குறித்து கருத்து தெவிக்கையிலேயே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் புலிகளின் பிரிவினைவாத கொள்கையுடன் முன்னோக்கிச் செல்கின்றவர்கள் கடந்த காலத்திலும் தற்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினன் நடவடிக்கைகள் நாட்டிற்கு அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. இவர்கள் தற்போது சர்வதேச நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்து அரசியல் தீர்வு குறித்து பேச இருப்பதாகவும் குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ னை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசுவதற்கு உண்மையில் கூட்டமைப்புக்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.
ஒரு அரசியல் கட்சியை அழைத்து இலங்கையின் தீர்வுகள் குறித்து அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றன என்றால் அது நாட்டிற்கு எதிரான துரோகத்தனமாகும். அது மட்டுமின்றி இலங்கையின் இறையாண்மக்கும் அச்சுறுத்தலான விடயமாகும்.
இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா, அமெக்கா மற்றும் கனடா உட்பட மேற்குலக நாடுகள் மிகவும் தீவிரமாக செயற்படுகின்றன. போலிக்குற்றச் சாட்டுக்களை சுமத்தி விசாரணைகளை முன்னெடுப்பதே அவர்களின் நோக்கம். இதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கவே கூட்டமைப்பு சர்வதேசத்தினால் பயன்படுத்தப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை உண்மையான குற்றவாளிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே உலகத்தின் முதல் வரிசை போர்க் குற்றவாளிகள் ஆவர். இவர்களுக்கு எதிரான விசாரணைகளே அவசியமாகும். இன்று லிபியாவிற்கு நடந்தது நாளை சிரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு நடைபெறலாம். தமிழ்க் கூட்ட மைப்பின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் ரணவக்க மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment