வடக்கு தெற்கு, சிங்களம் தமிழ் என இந்நாட்டில் உள்ள காணிகள், பிரிக்கப்படவில்லை. அனைத்தும் இலங்கையர்களின் காணிகளாகுமென, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். "ஷபிம் சவிய" திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அறிவுறுத்தும் வைபவம், தம்புள்ளையில் இடம்பெற்ற போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டுக்கே பொருத்தமான ஒரே சட்டத்தின் கீழ், நாம் செயற்படுகின்றோம். அந்த அடிப்படையில், காணி பிரச்சினைக்கும், நாம் தீர்வு பெற்றுக்கொடுப்போம். நாம் ஒருபோதும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வகையில் காணிகளை பகிர்ந்தளிக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவோம். வடக்கில் மட்டுமன்றி, நாடு முழுவதும் பிம்சவிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததன் பின்னர், அவர்களுக்கு இந்த காணியின் உரிமை கிடைக்கின்றது.
No comments:
Post a Comment