Thursday, October 20, 2011

விருப்புவாக்கு முறை மாற்றியமைக்கப்படவேண்டும். சம்பிக்க

விருப்பு வாக்கு முறை விரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும். தேசிய புத்திஜீவிகள் சபை ஏற்பாடு செய்த கருத்தரங்கில், அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். அமைச்சர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில், தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது, மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த உள்ளுராட்சி மன்ற தேர்தல், 70 சதவீதம் தொகுதி வாரியாகவும், 30 சதவீதம் விகிதாசார ரீதியாகவும் நடைபெறவுள்ளது. இதனை நாம் சட்டமாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இதனூடாக வாக்காளர்களுக்கு, தமக்கு அறிமுகமான ஒருவரை, எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி, வீண் செலவினமின்றி, தெரிவு செய்வதற்கு, சந்தர்ப்பம் கிடைக்கும்.

பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை நாம் இந்த தொகுதி வாரியான முறையில் நடாத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எனினும், விகிதாசார முறையில் உள்ள சிறந்த குணாம்சங்களையும் நாம் பெற்று, ஒரு கலப்பு முறையிலான தேர்தலுக்கு, செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment