இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் தோறும் இலங்கையில் குறைந்தபட்சம் ஒருவர் எச்.ஐ.வீ நோய்த் தொற்றுபினால் பீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது இந்த ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியில் 71 எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 2009ம் ஆண்டில் 3000மாகக் காணப்பட்ட நோயளிகளின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 3757 ஆக உயர்வடைந்துள்ளது. எயிட்ஸ் நோய்த் தொற்றினால் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, நாடு முழுவதிலும் 40000த்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகவும், ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதியளவு விழிப்புணர்வு நடவடிக்கைகைள மேற்கொள்வதன் மூலம் நோய் பரவுவதனை தடுக்க முடியும் என சுகாதாரப் பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment