Thursday, October 20, 2011

சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு கனடா வீசா மறுப்பு! போர்குற்றம் பின்னணியா?

எதிர்வரும் 30ம் திகதி அளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமெரிக்கா செல்லவுள்ளனர். இக்குழுவில் சம்பந்தன் , மாவை, சுமந்திரன் , சுரேஸ் பிறேமச்சந்தின் ஆகியோர் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லவுள்ள இவர்கள் கனடா சென்று அங்கு மக்களை சந்திக்கவும், அங்கு நிகழவுள்ள மாவீரர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளவும் ஏற்றபாடாகியுள்ளது.

இந்நிலையில் ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான கனடிய வீசா மறுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள கனடியத்தூதரம் இவருக்கான வீசாவினை மறுத்துள்ளது. இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டினை கொண்டுள்ள இவரின் வீசா மறுக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பலதரப்பட்ட சந்தேகங்களை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதி செய்த அவர், தனது வீசா நிராகரிக்கப்பட்டமையானது பெரியவிடயமல்ல எனவும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோருக்கான வீசா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். வீசா நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என்னவெனக் கேட்டபோது, அதற்கான காரணத்தை கனடிய தூதரகம் இதுவரை தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்கா செல்லும் இவர் கனடாவில் உள்ள தனது மனைவி பிள்ளைகளை சந்திக்கும் நோக்கில் இவ்வீசாவிற்கான விண்ணப்பத்தினை சமர்பித்திருந்தபோதும் வீசா மறுக்கப்பட்டதன் பின்னணி இவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்திய இராணும் இலங்கையில் குடிகொண்டிருந்த காலகட்டத்தில் இவர் மண்டையன் குழு எனும் கொலைக்கும்பலை இயக்கியதுடன் பல்வேறுபட்ட மனித உரிமைமீறல்களை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருணா பிரித்தானியானுள் களவாக நுழைந்து அங்கு சிறைவாசம் இருந்தபின்னர் அங்குள்ள தனது மனைவி பிள்ளைகளுடன் இணைவதற்கு அனுமதி கோரியிருந்தும் பிரித்தானிய அரசு கருணா மீது எவ்வித கருணையும் காட்டாமல் வெளியேற்றியமைக்கான காரணம் புலிகளியக்கத்தில் அவர் இருந்தபோது மனிதகுலத்தின் மீது அவர் மேற்கொண்ட குற்றச்செயல்களே காரணமாகும். அவ்வாறே சுரேஸ் பிறேமச்சந்திரனும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என புலிகள் தரப்பினரால் புலம்பெயர் நாடுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comments :

Anonymous ,  October 21, 2011 at 1:25 PM  

கருணா பிரித்தானியவிட்குள் களவாக நுழையவில்லை. இலங்கை அரசின் இராச தந்திர கடவுசீட்டில் லண்டனுக்கு வந்தார்.

அவர் பிடிபட்டதட்கு காரணங்கள் இறைவனுக்குத்தான் தான் வெளிச்சம். புலியோ அல்லது முன்னாள் புலிப்பினமியான ஊத்தை சேது இதன் பின்னணியில் இருக்கலாம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com