Sunday, October 23, 2011

இரு பெண்களை கெப் வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் திருகோணமலையில் கைது

வீடு செல்ல போக்குவரத்து வசதியில்லாது வீதியில் நின்று கொண்டிருந்த இரு பெண்கள் திருகோணமலை - மொரவெவ - திரியாய சந்தியிலிருந்து உப்புவெலி - நொரக்காடு சந்திவரையான பகுதிக்கு இடையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மொரவெவ பொலிஸார் கெப் வாகனத்தை தடுத்து நிறுத்தி குறித்த இரு பெண்களையும்
மீட்டுள்ளனர்.

.இந்த கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெப் வாகனத்தில் இருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மொரவெவ நாமல்வத்தை பகுதியில் கெப் வாகனம் சென்றுக் கொண்டிருந்த போது அதிலிருந்த பெண் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். இதனையடுத்து மொரவெவ பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் கெப் வாகனத்தை மடக்கிப் பிடித்து இரு பெண்களையும் காப்பாற்றியுள்ளனர்.

வீடு செல்ல போக்குவரத்து வசதியில்லாது வீதியில் நின்று கொண்டிருந்த இந்த இரு பெண்களும், புத்தளத்தில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் வாகனத்தில் (இன்று அதிகாலை 1.20 அளவில் ) ஹொரவபத்தானை பகுதியில் வைத்து ஏறி, கோமரங்கடவல செல்ல திரியாய சந்தியில் தம்மை இறக்கிவிடுமாறு கெப் வாகன சாரதியிடம்கோரியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுக்கு உதவி செய்வதாக அழைத்துச் சென்ற சாரதி திரியாய சந்தியில் கெப் வாகனத்தை நிறுத்தாது அந்த இருபெண்களையும் கடத்திச் சென்றுள்ளார்.

மொரவெவ பொலிஸார் இந்த சம்பவத்துடன் சந்தேக நபர்களை புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment