Thursday, October 6, 2011

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

பெர்சனல் கம்ப்யூட்டரை க‌ண்டு‌பிடி‌த்து க‌ணி‌னி உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் கணினி ‌நிறுவன உ‌ரிமையாள‌ர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். அவரு‌க்கு வயது 56. நீ‌ண்ட நா‌ட்களாக பு‌ற்றுநோயா‌ல் அ‌வ‌தி‌ப்ப‌ட்டு வ‌ந்த அவ‌ர் நே‌ற்‌று இற‌ந்ததாக அ‌ந்த ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் 1976 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி உருவாக்கினர்.

அதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com