இலங்கையில் கைது செய்யப்பட்ட மாலைத்தீவு சுல்தான் பார்க் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையே தொடர்புள்ளதா என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13ம் திகதி பயாகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜையான 27 வயதுடைய மொஹமட் அமீன் என்ற நபரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து போலியான மாலைத்தீவு மற்றும் பாகிஸ்தான் கடவுச்சீட்டுக்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றினர்.
மொஹமட் அமீனுக்கு இலங்கையில் வசிக்க உதவி புரிந்தவர்கள் யார் என்பது பற்றியும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவரை நாடுகடத்த மாலைத்தீவு அதிகாரிகள் இலங்கையுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment