தேசிய அரசமைக்கும் முயற்சியில் ரணில் மஹிந்த ரகசியச் சந்திப்பு.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடையே அண்மையில் ரகசியச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கதிர்காமப் பிரதேசத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட சந்திப்பில் தேசிய அரசு ஒன்றினை அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
குறிப்பிட்ட தேசிய அரசில் ரணில் விக்கரமசிங்கவிற்கு பிரதமர் பதவியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மேலும் 10 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களும் வழங்க ஜனாதிபதி உறுதி அளித்ததாகவும் அறியமுடிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் ரணில் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக ஐ.தே.க வட்டாரங்களில் அதிருப்தி நிலவும் அதேநேரம் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ரணிலிடம் இது தொடர்பாக வினவியபோது, இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுண்சில் அமர்வுகளின்போது இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவரப்படலாம் என எதிர்பாக்கப்படும் இத்தருணத்தில் அச்சவால்களை நாட்டின் சகல தரப்பினரையும் இணைத்து முறியடிக்கவேண்டும் என்ற முனைப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment