மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் மேற்கொண்ட பேராட்டம் இன்று புதன் கிழமை காலை முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் 20 கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீதேறி நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அங்கு விஜயம் செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.அப்துல்லாஹ் கூரை மீதேறி பேராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுன் அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
மட்டக்களப்பு சிறைச்சலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுகயீனம் காரணமாக இறந்த கைதியின் மரணம் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும், மட்டக்களப்பு சிறைச்சலைக்கு வாரத்தில் ஒரு தடவை வரும் வைத்தியர் வாரத்தில் இரண்டு தடவைகள் வரவேண்டும்,அத்தோடு அந்த வைத்தியரை மாற்றி வேறு ஒருரை நியமிக்க வேண்டும் ஆகியன உட்படமேலும் பல கோரிக்கைகளை கைதிகள் அங்கு முன்வைத்தனர்.
படகு மூலம் சட்டவிரோதமாக ஆட்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய தமிழ் கைதியே மரணமானவராவார்.
No comments:
Post a Comment