தேனீர் குவளையினுள் கண்டுபிடிக்கப்பட்ட யுஎஸ்பி : புலிகள் தொடர்ந்தும் நிதி வசூலிப்பில்
புலிகள் 2010 இலும் பணம் சேகரித்துள்ளார்கள் என்பது அண்மையில் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரில் ஒருவரான ஐரோப்பிய நிதிப் பொறுப்பாளர் சந்திரன் என்பவரின் வீட்டில் தேநீர் குவளைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த யூஎஸ்பி யிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் உறுதி படுத்தியுள்ளதாக நெதர்லாந்து விசாரணை அதிகாரிகளை ஆதாரம் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இதுதொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் 2010 ஆம் ஆண்டிற்கான பணம் வசூலித்த விபரங்கள் சில இருந்ததமை போன்ற விடயங்கள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளதுடன், ஐரோப்பாவில் தமிழீழம் என்ற கருத்து தற்போதும் உயிர்ப்புடன் உள்ளதன் காரணமாக புலிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை என்றும் அவர்கள் நிதி சேகரிப்பு ஆயுதக் கொள்வனவு, கடனட்டை மோசடி, சர்வதேச ரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் நெதர்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது.
புலிகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பாக நெதர்லாந்து பொலிஸார் அந்நாட்டு நீதிமன்றுக்கு சமர்பித்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இது புலிகள் மீது அந்நாட்டு அரசாங்கம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றது என்பதை உணர்த்துகின்றது.
0 comments :
Post a Comment