ஹிட்லர் ஜேர்மனியில் தற்கொலை செய்துகொள்ளவில்லை.
அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதிக்காலத்தை கழித்தார் --புதிய புத்தகம்
சர்வாதிகாரி ஹிட்லர் 1945 ஆம் ஆண்டில் பெரிலின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகின்றது. தென் அமெரிக்காவில் வயதாகி கிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகவியலாளரான ஜெராட் வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை ஸ்கை நியுஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
1945 ஆம் ஆண்டு பெர்லின் நகரிலுள்ள நிலக்கீழ் அறையொன்றில் ஹிட்லர் இறந்ததாக பல வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனா.; ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆவண ஆராய்ச்சிகள் மற்றும இரசாயன பரிசோதனைகள் என்பவற்றின் மூலம் ஹிட்லர் தனது இறுதிக்காலத்தை ஆர்ஜென்டீனாவில் கழித்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வில்லியம்ஸ் கூறினார்.
ஹிட்லரும் அவரது காதலி ஈவா பிறவுணும் இறந்தமைக்கான இரசாயன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அவர் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டதாக கூறுபவர்களின் சோடிக்கப்பட்ட கதைகளை நம்புவது ஏற்புடையதல்ல என வில்லியம்ஸ் கூறினார்.
ஹிட்லரும் அவரது காதலியான ஈவா பிறவுணும் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு சென்று பாஸிசவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆர்ஜென்டீனாவில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவித்த வில்லியம்ஸ், அந்நாட்டில் ஹிட்லர் 17 வருடம்கள் வாழுந்ததாகவும் அவருக்கு இதன்போது இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார்.
பேர்லின் நிலக்கீழ் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரது என கூறப்படும் மண்டையோடு உண்மையில் யுவதியொருவருக்கு சொந்தமானது என்பது ஆய்வில் நிருபணமாகியுள்ளமை தொடர்பிலும் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment