சுயதொழில் புரிவோருக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டிகளை கையளிக்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இத் திட்டத்தின் கீழ் 500 பேருக்கு நேற்றைய தினம் முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அமைச்சர் லசந்த அலகியவன்ன, சுயதொழில் புரிவோரின் சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகம , இலங்கை வங்கியின் முகாமையாளர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment